ஆந்திராவில் இன்று முதல் 13 மாவட்டங்கள் புதிதாக அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கிறது. இந்த 13 மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தவுடன் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்கள் பிரிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் ஆந்திர மாநில முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். இதனை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 26 ஆக பிரிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் புதிய மாவட்டங்களில் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டு இருந்தது. அதன்படி மொத்தம் 26 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு இன்று முதல் இருபத்தி ஆறு மாவட்டங்களாக உதயமாகிறது.
இன்று காலை9.05 முதல் 9 45 வரை புதிய மாவட்டங்கள் குறித்து இறுதி அறிக்கை வெளியிடப்பட்டு அதிகாரபூர்வமான மாவட்டங்கள் செயல்பாட்டிற்கு வருகிறது புதிய மாவட்டங்களுக்கு கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டுகள் அறிவிக்கப்பட இருக்கிறார்கள். அதன்படி சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாக கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதி தலைமையிடமாகக் கொண்ட பாலாஜி மாவட்டமும் இன்று முதல் செயல்பட இருக்கிறது. இது தொடர்பாக ஆந்திர மாநில அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிய மாவட்டங்களில் மறுசீரமைப்பு செயல்முறையை சமூகமாக முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் நான்கு துணை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தது.
புதிய மாவட்டங்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் 13 புதிய மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று தொடங்கிவைக்கயிருக்கிறார். புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகள் வெளியிடுவார். மேலும் ஏப்ரல் 4ம் தேதி மாவட்ட அலுவலகங்களில் அதிகாரிகள் பொறுப்பேற்கும் வகையில் அலுவலக ஒதுக்கீடு பணிகளை எளிதாக உத்தரவிட்டிருக்கிறார்.