Categories
மாநில செய்திகள்

ஆந்திராவில் கொரோனா பாதிப்பு… தொடர்ந்து உட்கட்டம்…!!!

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9,996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் கடந்தி சில நாட்களாகவே மிக அதிக எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்  9996 பேருக்கு கொரோனா  உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. அதனால் மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,64.142 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் கொரோனாவால் 82 பேர் உயிரிழந்துள்ளனர்.அதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 2,378 ஆக அதிகரித்துள்ளது.

ஆந்திரா முழுவதும் இன்று ஒரேநாளில் மட்டும் 6 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,70,924 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை  90,840 பேர் மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Categories

Tech |