ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உள்பட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆந்திரமாநிலம் நெல்லூர் அருகே புஜ்ஜிரெட்டிப் பாளையத்தில் லாரி மீது வேன் மோதியதில் 5 பெண்கள் உள்பட்ட 8 நபர்கள் உயிரிழந்தனர். இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்கள் சென்னையிலிருந்து டிராவலரில் ஶ்ரீசைலம் ஆன்மிக சுற்றுலா சென்றவர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.