ஆந்திராவில் இனி அலுவல் மொழியாக தெலுங்கில் மட்டுமே இனி எழுதவும், பேசவும் வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கலெக்டர் அலுவலகம், அரசு பள்ளி, கல்லூரிகள், தாலுகா அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களிலும் தெலுங்கில் மட்டுமே எழுதவும் பேசவும் வேண்டும். கையெழுத்து போடுவதும் தெலுங்கில் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற எந்த மொழிகளையும் பயன்படுத்தக் கூடாது.
ஆந்திராவில் உள்ள மக்களிடம் நாளுக்கு நாள் ஆங்கிலத்தின் மீதான மோகம் அதிகரித்து வருவதால் மேலைநாட்டு கலாச்சாரத்தில் அவர்கள் மூழ்கி அவர்களுடைய உடைகளும் அதேபோல அணிந்து வருகின்றனர். இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு சமூகவலைதளங்களில் பலத்த ஆதரவு கிடைத்துள்ளது. இத்திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.