ஆந்திர மாநிலத்தின் பிரபல நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொண்டார்.
விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார்மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்த பேரணி நடைபெற்றது. இந்த பேரணி விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை வரை நடைபெற்றது. இந்த பேரணியில் ஆந்திராவின் முன்னணி நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன்கல்யாண் கலந்து கொண்டார். ஏற்கனவே ஜன சேனா கட்சியும், பாஜகவும் கூட்டணியாக இருந்த நிலையில் சமீபத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனை அதிகப்படுத்தும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.