ஆந்திராவில் பரவும் மர்ம நோய்க்கு காரணம் என்னவென்று தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆந்திராவில் எலுருஎன்ற பகுதியில் கடந்த ஐந்தாம் தேதி 400க்கும் மேற்பட்டோர் திடீரென மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 45 பேருக்கும் மேற்பட்டோர் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வாந்தி, மயக்கம் வந்ததாக புகார் தெரிவித்தனர். அவர்களின் 45 வயதுடைய ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த மர்ம நோய் என்னவென்று அறிய மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் தடயங்கள் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் பிற நிறுவனங்களால் கூடுதல் சோதனைகள் நடத்தப்படுகின்றன. அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதுபற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு மருத்துவ குழுவினர்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அந்த மர்ம நோய்க்கும் காய்ச்சலுக்கும் காரணம் அரிசியில் கலந்திருந்த பாதரசம் மற்றும் காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இந்த ரசாயனம் ஆகியவை தான் காரணம் என்ற தேசிய ஊட்டச்சத்து ஆராய்ச்சி மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.