ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் புதிதாக 21 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆந்திராவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கியது. தற்போது, கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,965 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு 50 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 131 உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம், ஆந்திராவில் 67 பேருக்கு கொரோனா தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அதில் பலர் டெல்லி நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டெல்லி சென்று திருப்பியவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க மகாராஷ்டிரா மாநிலம் ஆல்வார் பகுதியை சேர்ந்த 85 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது கொரோனாவுக்கு இன்று நிகழ்ந்துள்ள 2வது பலியாகும். இவருக்கு திடீரென மூளை பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்ததாக ராஜஸ்தான் சுகாதாரத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ரோஹித் குமார் சிங் கூராயுள்ளார்.