ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் இன்று மட்டும் 10,825 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,87,331 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவுக்கு 71 பேர் பலியானதை தொடர்ந்து, தற்போது வரை ஆந்திராவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,347 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இன்று 11,941 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை குரு நாம் பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,82,104 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட 1,00,880 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.