ஆந்திராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்தை கடந்துள்ளதால் மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஆந்திராவில் கடந்த சில மாதங்களாக கொரோனாவில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 6,555 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை மாநிலத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,06,790 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது.
மாநிலம் முழுவதிலும் இன்று ஒரே நாளில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 7,485 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,43,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 56,897 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத் துறை கூறியுள்ளது.