ஆந்திராவில் இன்று மட்டும் 8 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்
ஆந்திராவில் முதலில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர சுகாதார துறை இன்று வெளியிட்டுள்ள தகவலில், ” ஆந்திராவில் இன்று மட்டும் 8,368 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,06,493 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 70 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,487 ஆக அதிகரித்துள்ளது.
மாநிலத்தில் இன்று மட்டும் 10,055 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,04,074 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97,932 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ஆந்திரா சுகாதார துறை கூறியுள்ளது.