Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்ட 1 1/4 டன் ரேஷன் அரிசி”…. பறிமுதல் செய்த போலீஸார்…!!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த 1 1/4 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அதிகாரிகள் அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் வேலூர் குடிமை பொருள் வழங்கு குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான அதிகாரிகள் சப் இன்ஸ்பெக்டர் மோகன், ஏட்டுகள் சிவசுப்பிரமணியன், ரமேஷ், முதுநிலை காவலர் சதீஷ் உள்ளிட்டோர் வாணியம்பாடி அடுத்து இருக்கும் ஜாப்ராபாத் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட பொழுது அப்பகுதியை சேர்ந்த சாதுல்லா பாஷா என்பவர் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கு 1 1/4 டன் ரேஷன் அரிசியை கடத்துவதற்காக கொஞ்சம் கொஞ்சமாக தனது இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்து ஒரு இடத்தில் சேர்த்துக் கொண்டிருந்தபொழுது போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தார்கள்.

மேலும் ரேஷன் அரிசி பறிமுதல் செய்து வாணியம்பாடி நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தார்கள்.

Categories

Tech |