ஆந்திரா எனது தாய் வீடு, தமிழ்நாடு எனது மாமியார் வீடு என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. அப்போது நடிகை ரோஜா இளைஞர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவியேற்றார்.இந்நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நான் அமைச்சரா இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்த தாய்வீடான ஆந்திர மக்களுக்கும், மாமியார் வீடான தமிழக மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
Categories