கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலக நாடுகள் இதன் தாக்குதலில் சிக்கி திணறி கொண்டிருக்கின்றன. இந்தியாவும் அந்த வரிசையில் உலக அளவில் மூன்றாவது அதிகம் தொற்று கொண்ட நாடாக இருந்து வருகிறது. ஒரு மாநிலம் கூட தப்பாமல் இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு எதிரான போரை இந்தியா வலுவாக நடத்தி வருகின்றது.
இந்தநிலையில் இதுவரை இல்லாத அளவாக ஆந்திர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியிருக்கிறது. மொத்தமாக ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. ஆரம்பத்தில் கொரோனா பரவலை தடுத்த ஆந்திர மாநிலத்தில் தற்போது பாதிப்பின் வேகம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று ஒரே நாளில் 10,093பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது.