Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வரின் இளைய மகள் தற்கொலை………. பெரும் அதிர்ச்சி….!!!!

ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தெலுங்கு தேசம் கட்சி நிறுவனர் ஆன ஏன்.டி ராமாராவின் இளைய மகள் உமா மகேஸ்வரி. இவர் ஹைதராபாத்தில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்கொலை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். என்டி ராமாராவுக்கு எட்டு மகன்கள், 4 மகள்கள் உள்ளனர். நான்கு மகள்கலில் உமா மகேஸ்வரி தான் இளையவர் ஆவார் .தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த உமா மகேஸ்வரியின் மகளின் திருமணம் சமீபத்தில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |