தண்ணீரில் மூழ்கி 3 சிறுவர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குன்னத்துப்பட்டி கிராமத்தில் ராஜா-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 8 வயதுடைய கிருத்திக் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அதே வசிக்கும் முத்து(8), தனலட்சுமி(8) ஆகியோருடன் சிவனாண்டி கண்மாய்க்கு குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மூன்று பேரும் ஆழமான பகுதிகள் சென்றதால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை பார்த்த 2 சிறுவர்கள் அழுது கொண்டே ஊருக்குள் இருப்பவர்களிடம் நடந்தவற்றை தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் கண்மணியில் மிதந்த குழந்தைகளின் உடலை மீட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.