நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதன்பிறகு குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் வேளாண் சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் 6 பெண் எம்.பி.களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
அதில் திரிணாமுல் காங்கிரசின் நுஸ்ரத் ஜஹான் மற்றும் மிமி சக்ரவர்த்தி, அமரீந்தர் சிங்கின் மனைவி பிரனீத் கவுர், தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே, காங்கிரசின் ஜோதிமணி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சசி தரூருடன் போஸ் கொடுத்தனர்.இதற்கும் பல விமர்சனங்களை தெரிவித்து வந்தனர்.
இதற்கு சசிதரூர் சக பெண்களுடன் செல்பி எடுத்தது வெறும் பணியிட தோழமை நிகழ்ச்சி என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு புதிய செல்பியை வெளியிட்டுள்ளார். அதில் ஆண் எம்.பி.களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு தன்னை ஒரு ‘சமவாய்ப்பு குற்றவாளி’ என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் முன்னர் வெளியிட்ட புகைப்படத்தை போல் வைரலாகாது என்று அவர் தெரிவித்துள்ளார்.