Categories
ஆன்மிகம் இந்து

ஆன்மீகத்தில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய… சில தகவல்கள்… படிச்சு தெரிஞ்சுக்கோங்க….!!!

நாம் தெரிந்துகொள்ளவேண்டிய சில ஆன்மீக தகவல்களை பற்றி இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.

நான்கு வேதங்களில் பழமையானது ரிக்.

வீணை இசைப்பதில் சிறந்தவன் ராவணன். காம்போதி என்னும் ராகம் இசைத்து சிவபெருமானின் மனம் கவர்ந்தான்.

பாண்டவர்களில் வாயுதேவனுக்கு மகனாகப் பிறந்தவன் பீமன்.

துங்கபத்ரா நதிக்கரையில் ராகவேந்தரின் மந்திராலயம் உள்ளது.

ராஜரிஷி என்று போற்றப்படும் முனிவர் விஸ்வாமித்திரர். இவரது இயற்பெயர் கவுசிகன்.

நந்தீஸ்வரர் அவதரித்த தலம் ஸ்ரீசைலம். இது ஆந்திராவின் கர்னுால் மாவட்டத்தில் உள்ள நல்லமலா மலையில் உள்ளது.

பஞ்சபூதம் எனப்படும் ஐந்து தலங்கள் சிவனுக்கு உண்டு. வாயு தலம் மட்டும் ஆந்திராவில் காளஹஸ்தியில் உள்ளது மற்ற நான்கும் தமிழகத்தில் உள்ளன.

திருநீறு, ருத்ராட்சம், வில்வம், ஸ்படிக லிங்கம், நமசிவாய என்னும் ஐந்தெழுந்து மந்திரம் ஆகிய ஐந்தும் சிவசின்னங்கள்.

பராசர முனிவரின் 6 புதல்வர்களான தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகியோருக்கு குருநாதராக இருந்து உபதேசித்தார் முருகப்பெருமான். அந்த இடம் ஆறுபடைகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம்.

Categories

Tech |