புத்தாண்டில் பெண் ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கிய உணவில் நத்தை இருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் உள்ள டட்லியைச் சேர்ந்த க்ளோ வால்ஷா (Chloe Walshaw) எனும் 24 வயது பெண், புத்தாண்டு தினத்தன்று Tipton’s Burnt Tree Island உணவகத்தில் இருந்து உபெர் ஈட்ஸில் அவருக்கும் அவருடைய காதலருக்கும் இரண்டு உணவுகளை ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். அந்த உணவில் வான் கோழி பிரை மற்றும் மாட்டிறைச்சி இரண்டும் இருந்துள்ளது. அதனை இருவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது க்ளோ தனது உணவில் நத்தையை பார்த்ததாக தனது காதலனிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு வாயில் இருந்த உணவை வெளியே துப்பியுள்ளனர். இதுகுறித்து அந்த பெண் கூறுகையில், பொதுவாக அவர் அந்த ஹோட்டலுக்கு தான் சென்று சாப்பிடுவார் எனவும் அன்றைய தினம் புத்தாண்டு என்பதால் ஆர்டர் செய்து வாங்கியதாகவும் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து இருவரும் சாப்பிடும்போது அந்த பெண்ணின் உணவில் நத்தையை பார்த்ததாகவும் இதனால் அதிர்ச்சி அடைந்து விட்டதாகவும் கூறினார்.