Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் ஆர்டர் செய்யும் மருந்துகள்…. நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்…!!

இணையதளத்தில் மருந்து வாங்கும் போது பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

இணையதளத்தில் மருந்துகள் வாங்கும் போது முக்கியமாக சில வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நீங்கள் இணைய தளத்தில் மருந்து வாங்கும் போது சில தவறான பதிவுகளால் ஆபத்தான மருந்துகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எனவே இதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் இணைய தளத்தில் மருந்து வாங்கும் போது முதலில் நம்பகத்தன்மையான ஒரு இணையதள செயலியை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதனையடுத்து இணையதளத்தில் மருந்துகளை ஆர்டர் செய்வதற்கு முன்பாக வாடிக்கையாளர் சேவையிடம் கட்டாயமாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேச வேண்டும். அதன்பின் இணையதளம் மூலமாக நீங்கள் வாங்கிய மருந்துகளை டாக்டரிடம் சென்று சரியான மருந்துகள் தானா என்பதை சரிபார்க்க வேண்டும். மேலும் டெலிவரி வாங்கும் போது அதற்குரிய சரியான பில்லை வாங்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலமாக ஏதேனும் தவறான மருந்துகள் அனுப்பப்பட்டு இருந்தால் உங்களுக்கு புகார் கொடுப்பதற்கு மருந்துகளுக்கான‌ பில் உதவும்.

Categories

Tech |