உத்தர பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரிடம் உல்லாசமாக இருந்த வீடியோவை காண்பித்து பெண் ஒருவர் பணத்தை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் 50 வயதான ஒருவர் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் நெருங்கி பழகியதால், ஒருநாள் அங்குள்ள ஹோட்டலில் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி இருவரும் நேரில் சந்தித்தபோது உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது அந்த மருத்துவருக்கு தெரியாமல் அந்த அறையில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது .அந்த பெண்ணுடன் மருத்துவர் உல்லாசமாக இருந்த அனைத்தும் அந்த கேமராவில் பதிவானது.
இந்நிலையில் மொய்தீன் கான் என்பவர் மருத்துவர் மற்றும் அந்தப் பெண் மஇருவரும் இணைந்து உல்லாசமாக இருந்த வீடியோவை அனுப்பி பணம் தராவிட்டால் இந்த வீடியோவை சமூக வலைத் தளத்தில் பரப்பி விடுவதாக மருத்துவரை மிரட்டியுள்ளார். மேலும் தான் போலீஸ் என்றும் கூறி போலி அடையாள அட்டையை அனுப்பி வைத்தார். அப்போதுதான் அந்தப் பெண்ணும் இதற்கு உடந்தை என்பது தெரியவந்து உள்ளது. இதனால் பதறிப்போன அந்த மருத்துவர் வேறு வழியில்லாமல் அவருக்கு 5 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் இது போதாது மேலும் பணம் தரவேண்டும் என்று கூறியதால், அவர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.