Categories
டெக்னாலஜி பல்சுவை

ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ்… பெறுவது எப்படி..? வாங்க பார்க்கலாம்..!!

முன்பிருந்த காலகட்டத்தில் ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்ற பல்வேறு சான்றிதழ்களை பெறுவதற்கு சம்மந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து பின்னர் வாங்கும் நிலமை இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. எந்த சான்றிதழ்கள் வாங்க வேண்டுமென்றாலும் வீட்டிலிருந்தபடியே செல்போன் மற்றும் மடிக்கணினியின் மூலம் உடனே ஆன்லைனில் பதிவு செய்து வாங்கிக் கொள்ள முடியும். தற்போது ஆன்லைனில் ஓபிசி சான்றிதழ் எவ்வாறு பெறுவது என்பதை பார்க்கலாம்.

தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் புகைப்படம்

ஆதார் அட்டை/ வாக்காளர் அட்டை/ குடும்ப அட்டை

சாதி சான்றிதழ்

விண்ணப்பிக்கும் முறை:

முதலில்https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx என்ற இணையதளத்தில் உள்நுழையவும். நீங்கள் முதன்முறையாக இந்த இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள் என்றால், புதிய பயனர் என்பதை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளவும்.

இதில் பதிவு செய்தபின்பு உங்களுக்கான User name மற்றும் password கிடைக்கும். அதைக் கொண்டு நீங்கள் மீண்டும் உள்நுழையவேண்டும். பின்னர் Department Wise → Revenue Department Option-ஐ கிளிக் செய்து OBC Certificate Certificate என்ற Option-ஐ தேர்ந்தெடுக்கவேண்டும்.

அதற்கு பின்பு கொடுக்கப்பட்ட தகவலை நன்கு படித்து Proceed பட்டணை கிளிக் செய்யவேண்டும். நீங்கள் CAN Register செய்யவேண்டும். அதற்கென இருக்கும் ஐகானை கிளிக் செய்யவும். அப்போது திறக்கப்படும் பக்கத்தில் அனைத்து கட்டாய விவரங்களையும் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் நிரப்பவும்.

பின்னர் சப்மிட் பட்டணை கிளிக் செய்க. நீங்கள் கொடுத்த தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு OTP வரும். அவற்றை உள்ளிட்டு சரிபார்க்கவேண்டும். பின்னர் வெற்றிகரமாக CAN பதிவில், CAN எண் உருவாக்கப்படும். பின்னர் CAN எண்ணை உள்ளிட்டு அதில் கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்து சப்மிட் பட்டணை கிளிக் செய்யவேண்டும்.

மேலும் கேட்கப்பட்டிருக்கும் ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவேண்டும். அப்போது ஒரு self declaration form கிடைக்கும். இவற்றை பிரிண்ட் செய்து நீங்கள் ஒப்பிடவேண்டும். பின்னர் அவற்றையும் ஸ்கேன் செய்து பதிவேற்ற வேண்டும். அதன்பின்பு ஆன்லைன் மூலம் சான்றிதழுக்காக ரூ.60 கட்டணம் செலுத்தவேண்டும்.

பின்னர் உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உங்களுக்கான ஓபிசி சான்றிதழ் கிடைக்கும். சான்றிதழ் கிடைத்ததும் உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு இரு குறுச் செய்தி வரும். பின்னர் இதே இணையதளத்தில் நீங்கள் உங்களது சான்றிதழை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.

Categories

Tech |