செல்போன் செயலி மூலமாக உடனடி கடன் பெறும் வசதியை பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தி வருகின்றது. அவ்வாறு அதிக வட்டியில் கடன் வாங்கியவர்களிடம் கடனை திரும்ப வசூலித்த பிறகும் மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டிருப்பதாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கடன் பெற்றவர்கள் மற்றும் அவரின் உறவினர்களின் ஆபாச படங்களை வெளியிடுவதாக கூறி பல கோடி ரூபாயை பறித்து வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கும்பல் மராட்டியம், உத்திரபிரதேசம்,டெல்லி மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வந்ததாகவும் இதில் சீன கும்பலின் பங்களிப்பு இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்த இரண்டு பெண்கள் உட்பட 22 பேரை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்த இந்த நடவடிக்கையில் 500 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி தடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.