ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் நண்பராக பழகிய நபரை கொன்று உணவாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான ஸ்டீபன் மற்றும் உணவாக சமைக்கப்பட்ட நபர் இருவரும் ஆன்லைனில் நண்பர்களாக பழகியுள்ளனர்.
இந்நிலையில், ஸ்டீபன் மனித மாமிசத்தை எப்படி சமைக்கலாம்? என்பது தொடர்பாக இணையதளத்தில் தகவல் சேகரித்து வந்துள்ளார். மேலும் ஆணுறுப்பு துண்டித்த பிறகு ஒரு நபரால் எப்படி உயிர் வாழ முடியும்? என்பதையும் இணையத்தில் தேடி வந்துள்ளார்.
இந்நிலையில் செப்டம்பர் மாதம் 44 வயதான மின் ஊழியர் ஒருவர் காணாமல் போனதாக காவல்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து நவம்பர் மாதத்தில் அங்குள்ள ஒரு பூங்காவில் மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அந்த எலும்புகளை ஆய்வுக்கு செய்தபோது அது மனித மாமிசத்தை சாப்பிடுவர்கள் தொடர்பிலான சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் தான் மோப்ப நாய்களுடன் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் குடியிருப்புக்குள் காவல்துறையினர் புகுந்துள்ளனர்.
இதையடுத்து அவருடைய வீட்டில் இந்த வழக்கு தொடர்பான கைப்பற்றப்பட்ட மொத்த ஆதாரங்களும் ஆசிரியருக்கு எதிராக இருந்தாலும் விசாரணை செய்யும் காவல்துறையினரிடம் அவர் பேச மறுத்துள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.