ஆன்லைன் மூலமாக இரயில் டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு ரயில்வே புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் இருந்து ஆன்லைனில் டிக்கெட் வாங்கும் பணிகள் தற்போது மொபைல் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வெரிஃபை செய்ய வேண்டும். அப்படி செய்த பிறகு தான் டிக்கெட் எடுக்க முடியும். இந்த விதி நீண்ட காலமாக டிக்கெட் வாங்காத பயணிகளுக்கான து.
இதனை செய்து முடிக்க 50 முதல் 60 வினாடிகள் மட்டுமே ஆகும் என்பதால் இதனை எளிதாக செய்யலாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீண்ட காலமாக டிக்கெட் முன்பதிவு செய்யாத பயணிகளுக்காக மட்டுமே ரயில்வே புதிய விதிகளை அமல்படுத்தியுள்ளது. இதையடுத்து வெரிஃபிகேஷன் எவ்வாறு செய்யப்படுகிறது என்பது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் ஐ.ஆர்.சி.டி.சி போர்ட்டலில் உள்நுழையும்போது, வெர்பிகேஷன் விண்டோ திறக்கும். ஏற்கனவே பதிவுசெய்த மின்னஞ்சல் மற்றும் மொபைல் எண்ணை அதில் உள்ளிடவும். இப்போது இடது பக்கத்தில் திருத்துவதற்கும் வலது பக்கத்தில் சரிபார்ப்பதற்கும் ஒரு ஆப்ஷன் இருக்கும். திருத்து விருப்பத்தைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் உங்கள் எண் அல்லது மின்னஞ்சலை மாற்றலாம்.
வெரிபிகேஷன் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் எண்ணுக்கு OTP (One Time Password) அனுப்பப்படும். OTP ஐ உள்ளிடும்போது உங்கள் மொபைல் எண் சரிபார்க்கப்படுகிறது. இதேபோல், மின்னஞ்சலுக்கும் வெரிபிகேஷன் செய்யப்பட வேண்டும். மின்னஞ்சலில் பெறப்பட்ட OTP மூலம் வெரிபிகேஷன் செய்யப்படுகிறது.