Categories
பல்சுவை

ஆன்லைனில் தரக்குறைவான பொருட்கள் விற்பனை…. பிரபல நிறுவனங்களுக்கு அபராதம்….!!!!

ஆன்லைன் வர்த்தகம் சமீப ஆண்டுகளாக மிகவும் சாதாரணமாகிவிட்டது. வாடிக்கையாளர்கள் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலமாகவே பெற்று கொள்கின்றனர். இருப்பினும் ஆன்லைன் வர்த்தகத்தில் தரக் குறைவான பொருள்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளது. அந்த வகையில் தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்த ஸ்னாப்டீல் (Snapdeal), பேடிஎம் மால் (Paytm Mall) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தலா ரூபாய் 1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் விசாரணையின் போது பிஐஎஸ் தரநிலைகளை எட்டாத பிரஷர் குக்கர்களை ஸ்னாப்டீல், பேடிஎம் மால் ஆகிய இரு நிறுவனங்களும் விற்பனை செய்துள்ளது உறுதியாகியுள்ளது. பின்னர் இரு நிறுவனங்களும் தரக்குறைவான பிரஷர் குக்கர்களை திரும்ப பெற்று, வாடிக்கையாளர்களிடம் அதற்கான பணத்தை செலுத்தும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பேடிஎம் மால் குபா, பிரிஸ்டின் உள்ளிட்ட நிறுவனங்களின் பிரஷர் குக்கர்களில் ஐஎஸ்ஐ மார்க் இல்லாதது தெரிந்தும் கூட அவற்றை விற்பனை செய்துள்ளது. அதேபோல் ஸ்னாப்டீல் நிறுவனமும் ஏஜி, சரன்ஷ் எண்டர்பிரைசஸ் ஆகிய நிறுவனங்களின் தரக்குறைவான பிரஷர் குக்கர்களை விற்பனை செய்துள்ளது. மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் விசாரணையின்போது இதை உறுதிப்படுத்தியது. ஸ்னாப்டீல், பேடிஎம் மால் உள்ளிட்ட இரு நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் இருந்து தரக்குறைவான பிரஷர் குக்கர்களை திரும்பப் பெற்று அதற்கான பணத்தையும் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |