Categories
மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் தேர்வு நடத்த….. கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்…. திருவண்ணாமலையில் பரபரப்பு….!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவர் முன்னேற்ற அமைப்பு சார்பில் இன்று பல்வேறு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் இருந்து மாணவர்கள் ஊர்வலமாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  கோஷமிட்டனர்.

அப்போது தமிழகத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடம் எடுத்து விட்டு நேரடி தேர்வு வைப்பது முறையானது இல்லை என்றும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினால் ஆன்லைன் மூலம் தான் தேர்வு நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 12 கல்லூரிகளை சேர்ந்த மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் கோரிக்கை மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் முருகேஷை நேரில் சென்று வழங்கினர்.

Categories

Tech |