Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் பணம் செலுத்த மறுப்பு…. உணவு நிறுவன ஊழியரை சரமாரியாக தாக்கிய இன்ஜினியர்…. சென்னையில் பரபரப்பு…!!

தனியார் உணவு நிறுவன ஊழியரை தாக்கிய குற்றத்திற்காக கம்ப்யூட்டர் இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள முகப்பேர் பகுதியில் பரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி கம்பெனியில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பரமேஷ் தனியார் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார். இதனை அடுத்து உனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் பாலசுப்பிரமணி என்பவர் பரமேஷ் வீட்டிற்கு உணவு பொருட்களை எடுத்து சென்றுள்ளார். அப்போது போன் பே மூலம் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக பரமேஷ் தெரிவித்துள்ளார்.

அதற்கு பாலசுப்பிரமணி மறுப்பு தெரிவித்து உடனடியாக பணத்தை தரவேண்டும் என கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த பரமேஷ் பாலசுப்ரமணியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த பாலசுப்பிரமணி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலசுப்பிரமணி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |