டெல்லியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவாலின் மகள் இணையதள மோசடியில் பணத்தை இழந்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மற்றும் டெல்லியின் முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் மகனான ஹர்ஷிதா என்பவர் இணையதள விற்பனையில் பொருளை விற்று பணத்தை இழந்துள்ளார். அதாவது ஹர்ஷிதா ஓஎல்எக்ஸ் என்ற விற்பனை இணைய தளத்தில் தான் உபயோகப்படுத்திய பொருட்களை விற்பனை செய்வதாக தெரிவித்துள்ளார். அப்போது நபர் ஒருவர் அந்த பொருட்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு பணத்தை ஆன்லைன் வழியாக வழங்குவதாக கூறியுள்ளார்.
இதனால் ஹர்ஷிதா அவரின் கியூஆர் குறியீட்டு எண்ணை அவருக்கு அனுப்பி உள்ளார். ஆனால் பொருட்களை வாங்கிக்கொண்டு அந்த நபர் பணத்தை அனுப்பாமல் ஏமாற்றிவிட்டார். அந்த நபர் தன்னை ஏமாற்றியதை ஹர்ஸிதா தாமதமாகத்தான் உணர்ந்துள்ளார். அதன்பின்பு உடனடியாக டெல்லியில் சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.