100 நாள் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நாடு முழுவதும் சர்வர் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் 100 நாள் வேலைக்கு பதிவு செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
இதுகுறித்து அறிந்த வருவாய்துறையினர் ஊரக வளர்ச்சிதுறையினர், போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். அதன்பிறகு அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.