பொதுவாக ஆன்லைன் ஷாப்பிங் மூலமாக டிவி, ஃப்ரிட்ஜ், செல்போன், வீட்டுக்கு தேவையான பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்களை விற்பனை செய்வார்கள். ஆனால் ஒரு சிறுமி தன்னுடைய சொந்த பாட்டியை ஆன்லைனில் விற்பனை செய்துள்ளார். அதாவது கடந்த 2009-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த Zoe என்ற சிறுமி தன்னுடைய பாட்டி கோபத்தில் திட்டியதால் இணையதளத்தில் ஒரு வெப்சைட்டை ஓபன் செய்து அதில் தன்னுடைய சொந்த பாட்டியின் புகைப்படத்தை போஸ்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது என பதிவிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் பார்த்த சிலர் போட்டி போட்டு பாட்டியை வாங்க முயற்சி செய்துள்ளனர். அதன் பிறகு கடைசியாக ஒருவர் 20,000 யூரோவுக்கு பாட்டியை வாங்கியுள்ளார். அதாவது இந்திய மதிப்பில் 17 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் ஆகும். இதை Zoe தன்னுடைய பாட்டியிடம் சென்று கூறியுள்ளார். அதற்கு பாட்டி என்னுடைய மதிப்பு 20 ஆயிரம் யூரோ கிடையாது பல மில்லியன் ரூபாய் ஆகும் என கூறியுள்ளார். இந்த தகவல் அப்போது செய்தி சேனல்களில் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது.