Categories
தேசிய செய்திகள்

ஆன்லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்…. எப்படி பதிவிறக்கம் செய்வது?…. இதோ முழு விபரம்….!!!!!

இந்தியாவிலுள்ள குடிமகன் ஒவொருவருக்கும்  பிறப்பு சான்றிதழ் மிகவும் முக்கியமான ஒன்றாகும். அதேபோன்று குடும்பத்திலுள்ள உறுப்பினர் ஒருவர் இறந்துவிட்டாலும் கட்டாயமாக அதற்குரிய சான்றிதழை வாங்கியிருக்க வேண்டும். அதன்படி தமிழ்நாடு அரசு விதிமுறைகளின் அடிப்படையில் குழந்தை பிறந்து 14 தினங்களுக்குள் பிறப்பு சான்றிதழும், இறப்புசான்றிதழை 7 நாட்களுக்குள்ளும் விண்ணப்பித்திருக்க வேண்டும். உங்களுடைய பஞ்சாயத்திலேயே பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஒருவேளை பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை தொலைத்துவிட்டாலும் ஆன்லைன் வாயிலாகவே எந்த வித செலவும் இன்றி விண்ணப்பித்து 2 நிமிடத்திலேயே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப்போது எவ்வாறு ஆன்லைன் வாயிலாக பிறப்பு மற்றும் இறப்புசான்றிதழை பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம்.

அந்த வகையில் சான்றிதழை பதிவிறக்கம் செய்வதில் 2 முறைகள் இருக்கிறது. அதாவது சென்னையில் வசிப்பவர்கள் https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்ற இணையதள முகவரியின் வாயிலாகவும், சென்னையை தவிர்த்து மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்ற இணையதள முகவரியின் மூலமாகவும் பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். முதலாவதாக இந்த இணையதளம் பக்கத்துக்கு சென்று பிறப்பு சான்றிதழ் என்ற பகுதியை கிளிக்செய்யவும். அதன்பின் பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்ததேதி முதலான அனைத்து விபரங்களையும் பதிவுசெய்து உங்களுக்கு சான்றிதழ் எந்த மொழியில் வேண்டுமோ அதனையும் தேர்வு செய்துகொள்ள வேண்டும். அதனை தொடர்ந்து Generate என்பதை கிளிக் செய்து விட்டால் தேவையான சான்றிதழ் கிடைத்துவிடும். இப்போது அந்த சான்றிதழை பிரிண்ட் செய்து கொள்ளலாம்.

Categories

Tech |