இந்தியா முழுவதும் தற்போது மூன்றாவது அலை பரவி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதல் அலையின் போது முழு ஊரடங்கு போடப்பட்டது. அப்போது மக்கள் வெளியில் வரமுடியாமல் இருந்தனர். மேலும் சாதாரண நோய்களுக்கு மக்கள் மருத்துவமனைக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது. அப்போது கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மக்களிடம் இருந்தது. இந்நிலையில் மக்கள் மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் தொடங்கப்பட்டது. அதாவது டெலிமெடிசின் மக்களின் கைகளுக்கு கொண்டு வரப்பட்டது. இந்த ஆலோசனையை முறை மூலம் கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்தே மருத்துவ சேவைகள் பெற முடியும் என்பன உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைத்தது. இதனால் தற்போது ஆன்லைன் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் செயலிகள் பெருகியுள்ளது. இதன் மூலம் மருத்துவ சேவைகளில் விலை பல மடங்காக அதிகரித்துள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து பேசிய முன்னணி அரசு மருத்துவமனையின் டீன் ஒருவர், அரசு மருத்துவர்கள் 100 பேர் குறிப்பாக சென்னை, கோவை சேர்ந்தவர்கள் வட இந்தியாவை சேர்ந்த செல்போன் செயலி ஒன்றுடன் இணைந்து உள்ளனர். அந்த செயலியானது நோயாளிகள், மருத்துவர்கள், மருத்துவமனைகளிடம் கமிஷன் தொகை பெறுகிறது. இதனால் மருத்துவ சேவைகளின் விலை அதிகரித்துள்ளது. அந்த மருத்துவ செயலில் தமிழகம் முழுவதும் இருக்கும் அரசு மருத்துவர்கள் 10 க்கும் மேற்பட்ட ஆன்லைன் செயல்களுடன் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சில அரசு மருத்துவர்கள் தங்கள் வேலை நேரத்திலும் ஆன்லைன் மூலம் ஆலோசனை வழங்கி வருகின்றனர் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். ‘
அதன்பிறகு பேசிய மருத்துவர்கள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர். சுவாமிநாதன், இதனை கண்காணிக்க எந்த நடவடிக்கையும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுக்க வில்லை. ஆன்லைன் ஆலோசனை பயன்பாடுகளில் அறிமுகம் சுகாதாரத்தை சமரசம் செய்து உள்ளது. எனவே அரசு மருத்துவர்கள் இதுபோன்ற செயல்களில் சேர்வதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவர் டாக்டர் கே. செந்தில் கூறியது, கவுன்சிலிங் விதித்துள்ள விதிமுறைகளின்படி, அரசு மருத்துவர்கள் இதுபோன்ற செயல்களில் தங்களை இணைத்து விளம்பரப்படுத்த முடியாது. இந்த செயலிகளுக்கு எதிராக செயல்படுவதற்கு கவுன்சிலுக்கு அதிகாரம் இல்லை. எனவே அப்ளிகேஷனுடன் இணைக்கப்பட்டுள்ள தனிப்பட்ட மருத்துவர்கள் மீது புகார் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.