Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் தற்கொலை …!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் 14 வயது சிறுவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மணவாளக்குறிச்சி அருகே கருமன் கூடல் பகுதியை சேர்ந்த ராஜகுமாரன் மகன் சஜன் அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். செல்போனின் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகிவிட்ட மாணவன் சஜன் ரம்மி விளையாடி பணத்தை இழந்துள்ளான். இதற்காக வெளிநாட்டிலுள்ள தனது தந்தையிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்த நிலையில் அவரது தாயார் சஜனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அவன் தனது செல்போனை உடைத்து வீசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிவிட்டான். இந்த நிலையில் அருகிலுள்ள வாழைத்தோட்டத்தில் மயங்கிய நிலையில் கடந்த சிறுவன் சஜனை திங்கள் சந்தையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறுவன் சஜன் உயிரிழந்துவிட்டான். இதுகுறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |