இந்திய ரயில்வேயில் தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயணம் மேற்கொள்கின்றன. அத்துடன் இது மாநிலங்களுக்கு இடையில் பயணம் மேற்கொள்வதற்கு மிகவும் சாதகமான போக்குவரத்து முறையாக கருதப்படுகிறது. இப்போது ஏராளமான மக்கள் ரயில்டிக்கெட்டுகளை பதிவுசெய்ய ஆன்லைன் முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் ரயிலில் பயணம் மேற்கொள்ள ஆன்லைன் மூலம் டிக்கெட்டை முன் பதிவு செய்வதில், ரயில்வேயானது தன் விதிகளில் பெரிய மாற்றத்தை செய்திருக்கிறது. இந்திய ரயில்வே சார்பாக பயணிகளின் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த ஐஆர்சிடிசி அதாவது இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
புது விதிகளின் அடிப்படையில் முன்பைவிட தற்போது அதிகளவு டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்துக்கொள்ளலாம். இந்திய ரயில்வேயின் கூற்றுப்படி உங்களது ஆதார் அட்டையை ஐஆர்சிடிசி (இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன்) கணக்குடன் இணைத்தால் ஒரு மாதத்தில் அதிகபட்சம் 12 ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யமுடியும். இந்த சூழ்நிலையில் ஐஆர்சிடிசி இல் உங்களது கணக்கை எவ்வாறு உருவாக்குவது என உங்களுக்குத் தெரியாவிட்டால், அதனைப் பற்றிய தகவலை இங்கே தெரிந்துகொள்வோம்.
# முதலாவதாக www.irctc.co.in எனும் இணைப்பிலுள்ள ஐஆர்சிடிசி இணையதளத்தைத் ஓபன் செய்ய வேண்டும்.
# அதன்பின் முகப்புப்பக்கத்தின் மேல் லோக்கின் மற்றும் ரெஜிஸ்டர் எனும் 2 விருப்பங்கள் தோன்றும். இவற்றில் நீங்கள் ரெஜிஸ்டர் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
# அவ்வாறு ரெஜிஸ்டர் விருப்பத்தை கிளிக் செய்ததும் புது விண்டோ திறக்கும்.
# இவற்றில் நீங்கள் “உங்கள் கணக்கை உருவாக்கு’ என்ற பகுதியை காணலாம்.
# அதில் பயனாளர் பெயர், கடவுச் சொல், மொழி, பாதுகாப்பு கேள்வி, பாதுகாப்பு பதில் ஆகிய அடிப்படை விபரங்களை உள்ளிடவும்.
# பின் தொடர் என்ற விருப்பத்தினை கிளிக்செய்ய வேண்டும்.
# அடுத்ததாக மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண் ஆகிய தனிப்பட்ட விபரங்களை நிரப்பவேண்டும்.
# அதனை தொடர்ந்து முகவரிக்குச் சென்று அனைத்து விபரங்களையும் நிரப்ப வேண்டும்.
# தற்போது கீழேவரும் சமர்ப்பிக்க என்ற பட்டனை கிளிக்செய்ய வேண்டும் .
# பின் உங்களது மொபைல் எண்ணில் ஓடிபி-ஐ உள்ளிட்டு ஒரு செய்திவந்ததும் ரெஜிஸ்டர் என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
# இனிமேல் நீங்கள் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்துக்கொள்ளலாம்.