Categories
உலக செய்திகள்

ஆன்லைனில் வந்த உணவு… ”பார்சலில் அருவருப்பு”…. திறந்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!

பெண் ஒருவர் தான் ஆர்டர் செய்த உணவில் சிறுநீர் கழித்த பொட்டலங்கள் இருந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார்.

லண்டனைச் சேர்ந்த மிக்கேல்(42) என்ற பெண் தன்னுடைய பிள்ளைகள் சாப்பிடுவதற்காக உணவை ஆன்லைன் உணவு சப்ளை நிறுவனமான  Ocadoவில் ஆர்டர் செய்துள்ளார். இந்நிலையில் ஆர்டர் செய்த பார்சல் வந்ததும் அதை சாப்பிடுவதற்காக அவருடைய 19 வயது மகன்  திறந்து பார்த்த போது உணவு பொட்டலங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் ஏதோ ஒன்று கட்டப்பட்டிருப்பதை கண்டு தனது அம்மாவிடம் கூறியுள்ளார். எனவே மிக்கேல் என்ன என்று பார்த்த போது, அந்த உணவுப் பொட்டலங்களுக்கு நடுவில் மூன்று கவர்களில் சிறுநீர் கழித்து  வைத்திருந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதையடுத்து அவர்கள் அருவருப்பப்பட்டு, அந்த உணவுகளை குப்பையில் கொட்டியுள்ளனர். மேலும் மிக்கேல் அந்த சிறுநீர் பொட்டலங்களை புகைப்படம் எடுத்து வைத்துக்கொண்டு Ocado  நிறுவனத்திற்கு புகைப்படத்தை அனுப்பி தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அந்த நிறுவனம் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு ஆள் அனுப்பி அந்த சிறுநீர் பொட்டலங்களை பெற்றுக் கொள்வதாக கூறியுள்ளது. ஆனால் மிக்கேல் எனக்கு அதெல்லாம் போதாது இந்த ஜென்மத்துக்கும் உங்கள் நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்யவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |