ஆன்லைன் மூலமாகவே மிகச் சுலபமாக வாக்காளர் அடையாள அட்டைக்கு எவ்வாறு, விண்ணப்பிப்பது என்று இங்கே பார்க்கலாம்.
https://eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடவும்.
அதில் National Voters Services Portal என்பதை கிளிக் செய்யவும்.
புதிதாக விண்ணப்பிப்பதற்கு ‘Apply online for registration of new voter’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் உங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற விவரங்களை உள்ளிட்டு முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவும்.
எல்லாம் பூர்த்தி செய்தவுடன் ’Submit’ என்பதைக் கிளிக் செய்யவும்.
வழங்கப்பட்ட ஐடியில் தனிப்பட்ட வாக்காளரின் அடையாள பக்கத்துடன் இணைப்பைக் கொண்ட மின்னஞ்சல் அனுப்பப்படும். இதன் மூலம் வாக்காளர் அடையாள விண்ணப்பத்தை நீங்கள் கண்காணிக்கலாம்.
விண்ணப்பித்த நாளிலிருந்து 10 நாள் முதல் ஒரு மாதத்தில் வாக்காளர் அடையாள அட்டையை நீங்கள் பெறலாம்.