ஆன்லைனில் வாங்கிய ஒரு சாதாரண பொருளினால் ஒருவர் லட்சங்களுக்கு அதிபதியாகயுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்குவது என்பது அனைவருடைய வாழ்க்கையிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இந்நிலையில் ஒருவர் ஆன்லைனில் வாங்கிய ஒரு பொருளினால் லட்சங்களுக்கு அதிபதியாகியுள்ளார். அதாவது தென் கொரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனில் ஒரு பழைய குளிர்சாதனப் பெட்டியை ஆர்டர் செய்துள்ளார். அந்த குளிர்சாதன பெட்டி 2 நாட்களில் டெலிவரி செய்யப்பட்டது. அதன்பின் குளிர்சாதனப் பெட்டியில் ஏதாவது பிரச்சினைகள் இருக்கிறதா என்பதை உரிமையாளர் சோதனை செய்துள்ளார். அப்போது குளிர்சாதனப் பெட்டியின் அடியில் 95 லட்ச ரூபாய் இருந்துள்ளது.
ஆனால் அந்த நபர் பணத்திற்கு ஆசைப்படாமல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின்படி காவல்துறையினர் அந்த நபரிடம் இருந்த பணத்தை கைப்பற்றி விசாரணை செய்துள்ளனர். ஆனால் பணம் யாருடையது என்பது தெரியவரவில்லை. எனவே காவல்துறையினர் 95 லட்ச ரூபாய்க்கான வரியை மட்டும் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை குளிர்சாதனைப் பெட்டியை வாங்கிய நபரிடம் கொடுத்துள்ளனர். மேலும் ஆன்லைன் மூலமாக பொருள்கள் மோசடி செய்யும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வரும் நிலையில், ஒருவருக்கு மிகப்பெரிய தொகை கிடைத்துள்ளது வியக்கத்தக்க ஒன்றாகும்.