நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் ஆன்லைன் கல்வியில் பெற்றோரின் பங்கு என்ன என்பது குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியாகியுள்ளது. ஆன்லைன் கல்வி பயிலும் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான நேர்மறையான சூழலை உறுதி செய்ய வேண்டும். மாணவர்களை வயது வாரியாக கண்காணித்து தேவைகளை கேட்டறிந்து வழி நடத்த வேண்டியது அவசியம். இதுகுறித்து பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.