பெண் தொழில் அதிபர் தனது ஆன்லைன் காதலனை சந்திக்க 1500 மைல் தூரம் பறந்து சென்று ஏமாற்றமடைந்து திரும்பியுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஜாஸ்மின் தான் ஆன்லைன் மூலம் சந்தித்து பழகிய காதலனை பார்ப்பதற்காக விமானம் மூலம் இந்டியனாயிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு புறப்பட்டார். விமானம் ஏறிய உடன் ஜாஸ்மின் தனது காதலனுக்கு குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார். ஆனால் அந்த நபரிடம் இருந்து அவருக்கு பதில் எதுவும் வராததால் தனது தொலைபேசி எண்ணை அவர் பிளாக் செய்து விட்டார் என ஜாஸ்மின் குழப்பத்தில் இருந்துள்ளார். ஆனாலும் நம்பிக்கையுடன் டெக்ஸாஸ் சென்று இறங்கிய ஜாஸ்மின் அந்த நபரை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார்.
அப்போதுதான் ஜாஸ்மினுக்கு உறுதியானது அந்த நபர் அவரது தொலைபேசி எண்ணை பிளாக் செய்தது. அதன் பிறகு அதே டெக்ஸாஸ் மாகாணத்தில் தனது தோழியின் வீடு இருப்பது நினைவுக்கு வர அங்கு சில தினங்கள் தங்கிவிட்டு அதன்பிறகு வீடு திரும்பினார். தன்னைப் பார்க்க வர சொல்லிவிட்டு ஏமாற்றிய அந்த நபர் குறித்து ஜாஸ்மினுக்கு குழப்பம் அதிகரித்தது. பணச்செலவு ஏற்பட்டிருந்தாலும் இதயமும் காயப்பட்டதால் மிகுந்த ஏமாற்றத்துடன் கவலையில் ஆழ்ந்துள்ளார். இதுபோல் நேரில் சந்திக்காத நபர்கள் யாருடனாவது தனது நண்பர்கள் பேசிக் கொண்டிருந்தால் அவர்களுக்கு தனது அனுபவத்தைக் கூறி எச்சரித்து வருகின்றார்.