ஆன்லைனில் காதல் வலை வீசி பண மோசடி செய்பவர்களிடம் இருந்து எப்படி தப்பிக்கலாம் என காவல்துறை சில அறிவுரைகளைக் கூறியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் செல்போன் என்பது இன்றியமையாத ஒரு பயன்பாடாக மாறிவிட்டது என்றே கூறலாம். இப்படி செல்போன் பயன்பாடு அதிகரித்ததால், ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகிறது. இந்நிலையில் பேஸ்புக் தளம் மூலமாக பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாக தற்போது புகார்கள் எழுந்துள்ளது. இதில் குறிப்பாக பேஸ்புக் தளத்தின் மூலமாகத்தான் காதல் வலை வீசி பண மோசடிகள் நடைபெறுகிறது. ஏனெனில் மும்பையை சேர்ந்த 47 வயதான ஒருவருடன் ஃபேஸ்புக் மூலமாக ஒரு பெண் பழகியுள்ளார். அந்தப் பெண்ணும் அந்த 47 வயதான நபரும் வீடியோ கால் மூலமாக பேசியுள்ளனர். அப்போது வீடியோ காலில் அந்தப் பெண் நிர்வாணமாக தோன்றி, 47 வயது நபரையும் நிர்வாணமாக தோன்றுமாறு கூறியுள்ளார்.
அந்த நபர் நிர்வாணமாக இருக்கும் வீடியோவை வைத்து அந்த நபரை மிரட்டி பணம் பறித்துள்ளார். அதன்பிறகு சிறிது நாட்கள் கழித்து நிர்வாண வீடியோவை இணையதளத்தில் இருந்து அகற்றுவதற்கு பணம் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதனையடுத்து வீடியோவை வைத்து தொடர்ந்து அந்த நபருக்கு மிரட்டல் வரவே அவர் மும்பையில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த நபரிடம் இருந்து இதுவரை 12.24 லட்சம் ரூபாய் பணம் பறித்துள்ளனர். இதனால் காவல்துறையினர் பாலியல் மோசடி மூலமாக பணம் பறிப்பவர்களிடம் இருந்து எப்படி பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்கான சில வழிமுறைகளை கூறியுள்ளனர்.
அதன்படி சமூக ஊடகங்களில் முன்பின் தெரியாத நபர்களின் நண்பர் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அதன்பிறகு இணையதள நண்பர்களிடம் இருந்து எந்த ஒரு சலுகைகளையும் பெறக்கூடாது. அப்படி சலுகைகளையும் பெற்றுக்கொண்டால் அவர்கள் பணம் பறிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இதனையடுத்து இணையதளத்தில் பழகும் நண்பர்களிடம் இருந்து பணம் கேட்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். இதைத்தொடர்ந்து அந்தரங்க வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை யாரிடமும் பகிரக்கூடாது. மேலும் பாலியல் மோசடிகள் மூலம் யாரேனும் உங்களிடம் பணம் பறிக்க முயற்சி செய்தால் உடனடியாக சைபர் கிரைம் காவல்நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும்.