கார் காப்பீடு ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என 2 வகைகளிலும் ஒருவர் வாங்கிக்கொள்ள இயலும் என்றாலும் ஆன்லைன் கார் காப்பீடு சிறந்த தேர்வாக இருப்பதற்கான காரணங்களை நாம் தெரிந்துகொள்வோம். ஆன்லைனில் கார் காப்பீட்டை வாங்கும் வேளையில், பல காப்பீட்டாளர்களின் கார் இன்சூரன்ஸ் பாலிசிகளை ஒப்பிடலாம். சரியான ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன், பல காப்பீட்டுக் கொள்கைகளின் அம்சங்கள், விலைகள் மற்றும் பாலிசி கவரேஜ் போன்றவற்றை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.
ஆன்லைன் கார் இன்சூரன்ஸ் வாங்குதல்கள் பல ஆவணங்களை நிரப்புவதிலிருந்து உங்களது நேரத்தை மிச்சப்படுத்துகிறது. ஆன்லைனில் கார் இன்சூரன்ஸ் பெறும் போது, உங்களது கவரேஜ் உடனே செயல்படுத்தப்படும். மற்றொருபுறம் நீங்கள் ஆப்லைனில் உங்களது கார் காப்பீட்டைப் பெற்றால், விண்ணப்பத்தைச் சமர்ப்பித்தவுடன் பாலிசி ஆவணங்கள் விரைவில் கிடைக்கும். அத்துடன் உங்களது பாலிசி ஆவணங்களை பெறுவதற்கு அதிக நேரம் ஆகலாம். ஆன்லைன் இன்சூரன்ஸ் வாங்குதல்களுக்கு காப்பீட்டு முகவரை பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. சிறந்த பாலிசியை தேர்வு செய்ய உங்களுக்கு உதவும் பல கவரேஜ் விருப்பங்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் குறித்து காப்பீட்டு நிறுவனத்திலுள்ள நிபுணர் உங்களுக்கு வழிகாட்டுகிறார்.