சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ஆன்லைனில் கேம் விளையாட அனுமதிக்காததால் விரக்தியடைந்த பிளஸ் 1 மாணவர் 213 பவுன் நகை, 33 லட்சத்துடன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். எந்நேரமும் செல்போனில் ஆன்லைன் வீடியோ கேம் விளையாடி வந்த அந்த மாணவரை, பெற்றோர் கண்டித்தனர். ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாமல் தடுத்துள்ளனர். அதனால் விரக்தி அடைந்த அந்த மாணவர் கடந்த 17ஆம் தேதி இரவு வீட்டில் இருந்து வெளியேறினார். உடனே அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகனை எங்கும் காணாததால், வீட்டிலுள்ள பீரோவை சோதனை செய்தனர்.
அதிலிருந்த 213 பவுன் நகை மற்றும் 33 லட்சம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பிறகு ஆன்லைனில் வீடியோ கேம் விளையாட விடாததால் தங்கள் மகன் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து உடனே போலீசில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின் பேரில் போலீசார் தனிப்படைகள் அமைத்து மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். நேபாளத்திற்கு செல்ல முயன்றபோது போலீசார் மடக்கிப் பிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவரை கண்டித்து அறிவுரைகள் வழங்கிய போலீசார் நகை மற்றும் பணத்துடன் மாணவரை பெற்றோரிடம் ஒப்படைத்து விட்டு சென்றனர்.