தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதாவை இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்கிறார்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பலரும் தங்கள் உயிரைப் பறி கொடுத்துள்ளனர். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை பறி கொடுத்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அவலம் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது. அதனால் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.
இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா இன்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி தாக்கல் செய்கிறார். ஆன்லைன் சூதாட்டத்தை தடைசெய்யும் அவசர சட்டம் கடந்த நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்று மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை ஜூன் மாதம் வரை நீட்டிக்கும் வசதி அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்ய உள்ளார்.