தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என் ரவி உரையாற்றினார்.அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் மூலம் படித்தவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளும் தற்கொலை செய்கின்றனர் என்று பல செய்திகள் வருகின்றன. சமீபத்தில் சென்னையில் வங்கி அதிகாரிகள் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெளியானது.
இதற்கு தமிழக அரசு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இதற்கு முதல்வர் ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக ஏற்கனவே சென்னை உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அரசு முறையீடு செய்துள்ளது. இந்த ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.