Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“ஆன்லைன் சூதாட்டம்” பறிபோன பணம்…. வங்கி ஊழியரின் முடிவு…!!

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பராயன் கோவில் அருகில் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரவி இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருடைய மகன் மதன்குமார் இவர் கவுண்டம்-பாளையத்தில்  உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்து இருக்கிறார். இதன் காரணமாகதொடர்ந்து விளையாடியவார் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் அதிக பணத்தை இழந்ததாக கூறப்படுகின்றது இதனால் மதன்குமார் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்.

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மதன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஆர்எஸ் புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி ஆர்எஸ் புரம் போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது,

கவுண்டம்பாளையத்தில் உள்ள தனியார் வங்கியில் தற்காலிகமாக பணியாற்றி வந்த மதன்குமார் தற்போது தேர்வு எழுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் நிரந்தர ஊழியராகப் இருக்கின்றார். அவர்  வேலை நேரம் போக மற்ற நேரங்களில் தனது செல்போனில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார். பெற்றோருக்கு தெரியாமல் இருந்தது . அதோடுஅவர்   சூதாட்டத்தில் எவ்வளவு பணம் இழந்தார் என்பது பற்றியும் தெரியவில்லை.

இது குறித்து அவரது நண்பர்களிடம் ஏதேனும் கூறினாரா என்று விசாரணை நடத்த இருக்கின்றோம் மதன்குமார் செல்போன் மூலமாக ஆன்லைன்சூதாட்டத்தில் ஈடுபட்டு   இருக்கிறார். அவர்  செல்போனில் அவரது விரல் ரேகையை பதிவு செய்தால் தான் திறக்கும் எனவே அவரது செல்போனை கைப்பற்றி அதை திறந்து ஆய்வு செய்த பிறகுதான் அவர் எவ்வளவு பணத்தை இழந்திருக்கிறார் என்பதை கண்டறிய முடியும்.

மேலும் அவரது வங்கிக் கணக்கையும் ஆய்வு செய்து வருகின்றோம் இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |