ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அனுமதி அளித்து ஐகோர்ட் நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு அரசு தடை உத்தரவு போட்டுள்ளது. இந்நிலையில் இத்தடை உத்தரவை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது இருந்தது. இதனைத் தொடர்ந்து கர்நாடக ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா தீக்சித் தலைமையிலான அமர்வு முன் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
அதன்படி இந்த விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதி கிருஷ்ணா தீக்சித் இருவரும் கேட்டனர். அதன் பிறகு அளித்த தீர்ப்பில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கு அனுமதி அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் அரசு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடாது என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தார்கள்.