Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு… 6 நிறுவனங்களுக்கு.. சிபிசிஐடி அதிரடி…!!!!!

மதுரை, திருச்சி, சென்னை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்த பலர் மன உளைச்சலால்  தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு அது நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் ஆன்லைனில் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக பதியப்பட்ட 17 வழக்குகளையும் சி.பி.சி.ஐ.டி விசாரணை செய்து வருகிறது.

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தொடர்பாக ஆறு நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் கூறியதாவது, சூதாட்ட செயலிகள் என்ன அடிப்படையில் செயல்படுகிறது? செயலிகளை உபயோகிப்பவர்கள் விளையாட்டில் தோற்றதை தாண்டி பணம் இழந்ததற்கு வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா? ஆன்லைன் சூதாட்ட விளையாடுபவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுகின்றனரா? என்ற பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |