Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ” ஹால் டிக்கெட்டுகளில் உள்ள முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் பதிவு எண் மற்றும் பாட குறியீட்டு எண் தவறாக இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும்.

விடைத்தாள்களை தட்டச்சு செய்ய அனுமதி கிடையாது. மாணவர்கள் கைப்பட விடைகளை எழுத வேண்டும். பாட புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட சில வரைபடங்களை நகல் எடுத்து அதை விடைத்தாளில் ஒட்டி வைக்க கூடாது. தேர்வு முடிந்த 60 நிமிடங்களுக்குள் விடைத்தாளை மாணவர்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அசல் விடைத்தாள்களை கொரியர் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு மாணவர்கள் வார இறுதி நாட்களில் அனுப்பி வைக்க வேண்டும். நேரில் சென்று வழங்க கூடாது விடைத்தாளில் உள்ள மாணவர்களின் கையெழுத்தில் எந்த மாற்றமும் இருக்கக்கூடாது. அதோடு விடைத்தாள்களை சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பாத மாணவர்கள் தேர்வுக்கு வராதவர்கள் கருதப்படுவார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |