Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் செயலிகள் மூலம் பண பட்டுவாடா… தீவிர கண்காணிப்பு…!!!

கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதிலும் சில கட்சிகள் தொகுதி பங்கீடு பற்றிய தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதனால் மாநிலம் முழுவதிலும் தீவிர கண்காணிப்பு பணி நடந்துவருகின்றது.

இந்நிலையில் கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் அனுப்புவதாக தகவல் வெளியானது. இதனைத் தடுக்க சைபர் கிரைம் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது. அதற்காக தனியாக ஒரு குழு அமைத்துள்ளதாகவும், கட்சி அலுவலகங்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |