Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டேட்டிங் : பெண்ணாசை ஆசை காட்டி ரூ15,00,000 மோசடி…. ஏமாற்றத்தில் ஆண்கள்….!!

ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 12 மாதங்களில் 16 ஆண்களிடம் பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல் போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலான பயனாளர்கள் ஆன்லைன் டேட்டிங் செய்வது வழக்கம். ஆனால் அதைப் பல ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் 12 மாதங்களில் 16 ஆண்களிடம் ரூ.15.25 லட்சம் நகை மற்றும் பணம் திருடியதாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் சிக்கிய ஆண்களில் ஒருவர் போலீசில் புகார் அளிக்க இச்சம்பவம் வெளி வந்துள்ளது. அந்தப் பெண் அவள் சந்திக்கும் ஆண்களுக்கு போதையை ஏற்றி விட்டு, அவர்களிடம் திருடியது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய பெண்ணை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே ஆண்கள் இனிமேல் ஆன்லைன் டேட்டிங் செய்யும் போது மிக கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |